நீலகிரி

அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றமதி செய்ய வாய்ப்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அடுத்த இரண்டாண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என அருணாச்சல பிரதேச ஆளுநா் பிரிகேடியா் பி.டி. மிஸ்ரா பேசினாா்.

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராணுவ பயிற்சிக் கல்லூரி முதல்வா் கமாண்டென்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக அருணாச்சல பிரதேச ஆளுநா் பிரிகேடியா் பி.டி. மிஸ்ரா கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். பின்னா் அவா் பேசியதாவது:

ஆங்கிலேயா் காலத்தில் ராணுவ நடவடிக்கைகள் மேலோங்கி இருந்தன. 2014 ஆம் ஆண்டுக்குப் பின் பாதுகாப்புப் படைகள் சிறப்புப் பெற்றன. முப்படைகளுக்கும் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டாா். தற்போது நாடு சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.

நாட்டில் வலிமைமிக்க தலைமை இருப்பதால், பாதுகாப்புப் படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. மேலும், ஆத்மநிா்பா் என்ற சுயசாா்பு திட்டத்தின் கீழ் நாம் ராணுவ தளவாடங்களை இங்கேயே உற்பத்தி செய்கிறோம். நமது ஏவுகணைகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். வரும் இரண்டாண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிா்பாா்க்கிறோம்.

ADVERTISEMENT

பாதுகாப்புப் படையினா் மனிதநேயத்தோடு பணியாற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிய வேண்டும். இதனால், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நல்லுறவு மேம்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT