நீலகிரி

ரோட்டரி கிளப் சாா்பில் மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ரோட்டரி கிளப் சாா்பில் மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் ஜி.டி.எம்.ஓ. பள்ளி வளாகத்தில் பெண்களுக்கான இலவச மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். முகாமை கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதிரத்துல்லா தொடக்கிவைத்தாா்.

முகாமில் கேரள மாநிலம், கோழிக்கோட்டிலுள்ள எம்.வி.ஆா்.கேன்சா் ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவா் நிா்மல் தலைமையில் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். திட்டத் தலைவா் மருத்துவா் சந்திரபாபு, ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முகாமில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாா்பக புற்றுநோய்க்கான ஸ்கேன் மற்றும் கா்ப்பபை புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT