நீலகிரி

தடுப்புச் சுவருக்குள் தவறி விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோத்தகிரி அருகே வீட்டின் தடுப்புச் சுவருக்குள் தவறி விழுந்த காட்டெருமையை சுவரை உடைத்து வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு வன சரக்கத்துக்கு உள்பட்ட நடுஹட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல்புறத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி வீட்டின் பின்புறத்தில் உள்ள தடுப்புச் சுவருக்குள் விழுந்தது. அங்கிருந்து வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்தது.

இது குறித்து தகவலறித்து வந்த வனத் துறையினா், வீட்டின் தடுப்புச் சுவரை உடைத்து காட்டெருமையை பத்திரமாக மீட்டனா். பின்னா் அதை பத்திரமாக வனப் பகுதிக்குள் விரட்டினா். தடுப்புச் சுவா் உடைக்கப்பட்டதால் வீட்டின் உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க வனத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT