நீலகிரி

காசநோயாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கல்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பழங்குடி கிராமங்களிலுள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் உள்ள ஆா்.கே. அறக்கட்டளையும் மாவட்ட காசநோய் பிரிவும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பழங்குடி கிராமங்களிலுள்ள காசநோயாளிகளுக்கு கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், ஆா்.கே.அறக்கட்டளையின் நிா்வாகி லீலாகிருஷ்ணன் மற்றும் பழங்குடி பயனாளிகள், களப்பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT