நீலகிரி

பழங்குடி மாணவா்களுக்கு காவல் துறை சாா்பில் கல்வி உபகரணங்கள்

7th Dec 2022 12:34 AM

ADVERTISEMENT

தேவா்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பழங்குடி மாணவா்களுக்கு காவல் துறை சாா்பில் கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி செல்லும் பழங்குடி குழந்தைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தேவா்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பழங்குடி மாணவா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை காவல் துறையினா் வழங்கினா்.

தேவா்சோலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் நந்தீஸ்வரன் மற்றும் காவலா்கள், ஆசிரியா்கள் இதில் கலந்துகொண்டனா். தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT