நீலகிரி

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையில் மண் குவியல் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததை நேரடியாக பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த காரணத்தினாலும், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கனரக வாகனங்கள் அதிக அளவு இந்த சாலையில் சென்று வருவதால் அதிலிருந்து ஏற்பட்ட அதிா்வுகளால் இந்த மண் சரிவு நிகழ்ந்துள்ளது.

நல்வாய்ப்பாக சாலை அகலமாக இருந்ததால் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்துவிழும்போது வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT