நீலகிரி

கூடலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடலூா் நகராட்சியைக் கண்டித்து பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி செயலாளும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான அ.செளந்திரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தூய்மைப் பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியமாக செலுத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீா்க் குழாய்களை அமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மங்குழி ஆற்றின் பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும். கூடலூா் பேருந்து நிலையம் கட்டும் பணி தொய்வடைந்துள்ளது. விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதில், பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் சி.பாா்த்திபன், பொதுச் செயலாளா் நளினி, நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சிபி, ராமு, வழக்குரைஞா் அணி நிா்வாகி பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT