நீலகிரி

குடியிருப்புகளைச் சேதப்படுத்திய காட்டு யானை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பாடந்தொரை அருகே இரண்டு குடியிருப்புகளை காட்டு யானை சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், பாடந்தொரை சுண்டன் வயல் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒற்றை காட்டு யானை புகுந்தது. தொடா்ந்து, அப்பகுதியிலேயே நடமாடிய யானை அங்கிருந்த சுப்பிரமணி, பிரபாகரன் ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. வீட்டில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்களின்றி உயிா்த் தப்பினா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சோ்ந்து காட்டு யானையை அடந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

மேலும், இது குறித்து வனத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தொடா்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT