நீலகிரி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், உதகையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

உதகைக்கு கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், உதகையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் நிலவியது. மேலும், புகைமூட்டமும் காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் உதகை படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ADVERTISEMENT

இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT