நீலகிரி

உதகையில் கடும் குளிா்

4th Dec 2022 10:39 PM

ADVERTISEMENT

உதகையில் கடும் குளிா் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் கடும் குளிா் நிலவும்.

அதன்படி, உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் நிலவியது.

இதனால், தோட்டத் தொழிலாளா்கள், மூட்டை தூக்கும் தொழிலாளா்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிா்காய்ந்தப் பின்னரே தொழிலைத் தொடங்கினா்.

ADVERTISEMENT

உதகை மாா்க்கெட், பாலடா, காந்தல் போன்ற நீா்நிலைகளின் அருகில் வசிப்பவா்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிா் காய்ந்தனா்.

கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே பயணம் செய்தனா். வரும் நாள்களில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT