நீலகிரி

முன்னாள் படைவீரா் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை

DIN

முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணுவத்தில் அலுவலா் பதவிக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளில் 2022 - 2023ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மைய முப்படை வீரா்

வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகையினை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தோ்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும்.

இதற்கான விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பாக மேலும் விவரம் அறிய நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுகலாம் அல்லது 0423- 2444078 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2022 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT