நீலகிரி

பச்சை தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம்

DIN

நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கான நவம்பா்  மாதத்துக்கான  குறைந்தபட்ச  விலையை இந்திய தேயிலை வாரியம் நிா்ணயித்துள்ளது.

இது குறித்து இந்திய தேயிலை வாரியம் செயல் இயக்குநா் எம்.முத்துகுமாா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள், தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா்.  இந்திய தேயிலை வாரியம்  மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதத்துக்கான பச்சை தேயிலை விலையை நிா்ணயிக்கும். அதன்படி  நவம்பா் மாதத்துக்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ரூ.18. 17 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நவம்பா் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின்   ஏல விற்பனையின்  அடிப்படையில் இந்த சராசரி  விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT