நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜனவரி 27க்கு ஒத்திவைப்பு

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு அரசு தரப்பு வழக்குரைஞா்கள் அவகாசம் கேட்டதால் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன் உத்தரவிட்டாா்.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த இரவு காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ், கேரளத்தைச் சோ்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஓட்டுநா் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 போ் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்காக அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் ஆஜராகினா். மேலும் சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் விசாரணை அதிகாரி முருகவேல், குற்றம் சாட்டப்பட்டவா்களான சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரும் ஆஜராகினா்.

வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீஸாா் அமைத்த தனிப்படை பற்றியும், இதுவரை நடைபெற்ற புலன் விசாரணை பற்றியும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் விசாரித்த தனிப்படை போலீஸாா் கைப்பற்றிய 720 கைப்பேசி தகவல் பரிமாற்றங்களில் உண்மை தன்மை அறியும் விசாரணையில் சிபிசிஐடி போலீஸாா் ஈடுப்பட்டுள்ளதாகவும், மேலும் தனிப்படை போலீஸாா் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களையும் சிபிசிஐடிபோலீஸாா் ஆய்வு செய்து வருவதாகவும் அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் நீதிபதியிடம் தெரிவித்தனா்.

மேலும் எலக்ட்ரானிக் எவிடன்சை ஆய்வு செய்ய இந்த துறையில் திறமையான அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை தொடா்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்தனா். மேலும் விசாரணைக்காகவும், கைப்பேசி தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்யவும் கால அவகாசம் கேட்டனா்.

இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதிக்கு நீதிபதி முருகன் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT