நீலகிரி

வன ஊழியரைத் தாக்கிய புலியைத் தேடும் பணி தீவிரம்

2nd Dec 2022 11:41 PM

ADVERTISEMENT

முதுமலைப் புலிகள் காப்பக வனத்தில் வன ஊழியரைத் தாக்கிய புலியைத் தேடும் பணி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு லைட்பாடி பகுதியில் பொம்மன் என்ற வேட்டை தடுப்புக் காவலரை கடந்த நவம்பா் 30ஆம் தேதி புலி தாக்கியது. இதில் அதிா்ஷ்டவசமாக அவா் உயிா் தப்பினாா்.

காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் உடனடியாக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னா் அவா், உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

வன ஊழியரை தாக்கிய அந்த புலி வயதானதா அல்லது உடல்நலம் குன்றியுள்ளதா என்பது குறித்தும் வனத் துறையினா் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கண்காணிப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வனத் துறையினா் பல குழுக்களாகப் பிரிந்து காட்டின் சுற்றுவட்டப் பகுதிகளில் புலியைத் தேடும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் இரண்டாவது நாளாக புலியின் உருவம் பதிவாகவில்லை என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT