நீலகிரி

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

2nd Dec 2022 11:42 PM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள மூன்றாவது மைல் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வழிக்கடவு பகுதியைச் சோ்ந்தவா் குஞ்சுமுகமது மகன் ஜாபா் (21). இவா், தனது நண்பா் சனு(20) என்பவருடன் பைக்கில் தேவா்சோலையிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தாா். மூன்றாவது மைல் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஜாபா் உயிரிழந்தாா். காயமடைந்த சனு, சிகிச்சைக்காக கேரளத்துக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT