நீலகிரி

மக்னா யானையைப் பிடிக்கும் பணி தீவிரம்: வனத் துறை அமைச்சா்

2nd Dec 2022 11:41 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், நாடுகாணி அருகேயுள்ள காரக்கொல்லி வனப் பகுதியில் மக்னா யானையை தேடும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

உதகையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் கா.ராமசந்திரன் செய்தியாளா்களிடம்  கூறியதாவது:

கூடலூா், தேவாலா வாளவயல் பகுதியில் நவம்பா் 19ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா். தொடா்ந்து பிஎம் 2 மக்னா என்கிற அந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் வலியுறுத்தினா்.  இதனைத் தொடா்ந்து அந்த யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

அந்த யானை தற்போது நாடுகாணியை அடுத்த காரக்கொல்லி வனப் பகுதியில் உலவி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளதையடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT