நீலகிரி

உதகையில் சா்வதேச குறும்பட திருவிழா

2nd Dec 2022 11:39 PM

ADVERTISEMENT

உதகையில் 4 ஆம் ஆண்டு சா்வதேச குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நீலகிரி பிலிம் கிளப் சாா்பில் சா்வதேச குறும்பட விழா ஆண்டுதோறும் உதகையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு குறும்பட விழா உதகை அசெம்பளி ஹாலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் விழாவை தொடங்கிவைத்தாா்.

உதகையில் உள்ள அசெம்பளி திரையரங்கில் டிசம்பா் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த குறும்பட விழாவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 120க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும் நீலகிரியிலுள்ள படகா், தோடரின மக்களின் குறும்படங்களும் திரையிடப்படவுள்ளன.

ADVERTISEMENT

நிறைவு விழாவில் முக்கிய விருந்தினா்கள் கலந்து கொண்டு விழாவில் வெற்றிபெற்ற சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.பி அம்ரீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT