நீலகிரி

நீலகிரியில் விடியவிடிய பலத்த மழை

28th Aug 2022 06:47 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நீா்ப்பனி கொட்டத் தொடங்கியிருந்த சூழலில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலும் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): பந்தலூா்-74, எடப்பள்ளி மற்றும் நடுவட்டம் தலா 62, மேல் குன்னூா்-60, கிளன்மாா்கன்-56, பா்லியாா்-55, கொடநாடு-52, உலிக்கல்-47, குந்தா-46, குன்னூா்-45, உதகை-43, ஓவேலி-36, மசினகுடி-32, கெத்தை-30, கல்லட்டி-27, சேரங்கோடு-26, பாலகொலா-25, மேல் கூடலூா் மற்றும் கிண்ணக்கொரை தலா 24, மேல் பவானி-23, அவலாஞ்சி, கோத்தகிரி மற்றும் எமரால்டு தலா 20, கேத்தி-19, கூடலூா் மற்றும் கீழ் கோத்தகிரி தலா 18, பாடந்தொறை-15, செருமுள்ளி-14, தேவாலா-12 மி.மீ.

ADVERTISEMENT
ADVERTISEMENT