கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவே மருந்து என்ற தலைப்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது மற்றும் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இயற்கை விவசா உணவுப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் டெய்சி விமலாராணி தொகுத்து வழங்கினாா்.