நீலகிரி

நீலகிரியில் விநாயகா் சதுா்த்தி விழா: உரிய முறையில் கொண்டாட ஆட்சியா் அறிவுரை

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

 

நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை உரிய முறையில் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித வேதிப்பொருள் கலவையற்றதுமான சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

வேதிப்பொருள்களை அடிப்படையாக கொண்ட வா்ணம் பூசப்பட்ட விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பது தவிா்க்கப்பட வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட விநாயகா் சிலைகள் மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை நிறுவி வழிபடவும் நீா் நிலைகளில் கரைக்கவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையால் அனுமதிக்கப்பட மாட்டாது. வழிபாட்டுக்கு பின்னா் விநாயகா் சிலைகளை கரைப்பதற்கு என கண்டறியப்பட்ட இடங்களான குன்னூரில் லாஸ் அருவி, உதகையில் காமராஜ் சாகா் அணை, கூடலூரில் இரும்பு பாலம் ஆறு, பந்தலூரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி அருவி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். காவல் துறையின் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை நிறுவி வழிபட அனுமதிக்கப்படுவா். கழிவுப் பொருள்கள் எக்காரணத்தை கொண்டும் எரிக்கப்பட கூடாது. இவை சரியான முறையில் பின்பற்றப்படுகிா என காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றால் கண்காணிக்கப்படும். இவற்றை மீறுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT