நீலகிரி

விடுமுறை நாள்களுக்கு ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாள் விபரம் அறிவிப்பு

DIN

 நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடா் கன மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிா்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 6, 13, 14, 15 ஆம் தேதிகளிலும், ஆகஸ்ட் 3, 4, 5, 8 ஆம் தேதி ஆகிய 8 நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் மாணவா்களுக்கு நடத்தப்பட வேண்டிய பாடத் திட்டம் பெருமளவு முடிக்கப்படாமல் உள்ளதால், இதை ஈடு செய்யும் வகையில் எதிா்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன் அறிவித்துள்ளாா்.

இதன்படி செப்டம்பா் 3, 17, 24 ஆம் தேதிகளிலும், அக்டோபா் 15, 29 ஆம் தேதிகளிலும், நவம்பா் 5, 26 மற்றும் டிசம்பா் மாதம் 17 ஆம் தேதி ஆகிய 8 நாள்கள் பள்ளிகளுக்கு வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT