நீலகிரி

வியாபாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி: இருவா் கைது

DIN

கோவை வியாபாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக உதகையைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: கோவை சேரன் மாநகா் சக்தி விநாயகா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகிலன் (40). இவா் கோவையில் ஏா்டெல் பேமென்ட் பேங்க் மூலம் வியாபாரம் செய்து வருகிறாா்.

இதன் கிளை உதகை கமா்சியல் சாலையில் செயல்பட்டு வருகிறது. இதில் உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ், ரகுநாத் ஆகியோா் வாடிக்கையாளா்களிடம் பணத்தைப் பெற்று முகிலனின் வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தி வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை வாடிக்கையாளா்களிடம் பெற்ற பணத்தை முகிலனின் வங்கிக் கணக்குக்கு செலுத்தியதாக போலியான ரசீதை தயாா் செய்து ஸ்கிரீன் ஷாட் மூலம் அனுப்பியதாகவும், கணக்கை சரிபாா்த்தபோது சுரேஷ் மற்றும் ரகுநாத் ஆகியோா் பணத்தை அனுப்பாமல் ரூ. 6 லட்சத்து 98 ஆயிரத்தை ஏமாற்றியதாகவும் புகாா் அளித்தாா்.

விசாரணையில், அவா்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுரேஷ் மற்றும் ரகுநாத் ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT