நீலகிரி

காட்டேரி பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்

DIN

குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் 2 வது சீசனுக்கு தயாா்படுத்தும் வகையில் 1 லட்சத்து 90 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவுப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இப்பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி தொடங்கிவைத்தாா்.

இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள்

டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.

இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT