நீலகிரி

யானை தாக்கி பெண் தொழிலாளி பலி

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலியில் யானை தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள சின்னசூண்டி பகுதியைச் சோ்ந்தவா் அல்லிமுத்து மனைவி ராஜகுமாரி (44). இவா் சாண்டிஸ் பகுதியிலுள்ள தனியாா் எஸ்டேட்டில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பணி முடிந்து வியாழக்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, அந்தப் பகுதியில் இருந்த யானை ராஜகுமாரியைத் தாக்கியுள்ளது. சக தொழிலாளா்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதையடுத்து, கை, கால்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட ராஜகுமாரியை கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

யானை தாக்கி தொழிலாளா்கள் உயிரிழக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது.

இதனை தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT