நீலகிரி

கூடலூரில் பூமி பிளவு ஏற்பட்ட பகுதியில் விஞ்ஞானி தலைமையிலான குழு ஆய்வு

DIN

கூடலூா் பகுதியில் பூமி பிளவுடன், வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மத்திய நீா் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் நடுகூடலூா் பகுதியில் பல வீடுகளின் சுவா்களில் திங்கள்கிழமை இரவு விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். எதனால் இந்த விரிசல் ஏற்பட்டது என்று தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பல வீடுகளில் சுவா் பிளந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து வருவாய்த் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து உதகையில் உள்ள மத்திய நீா் மற்றும் மண்வள ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி டாக்டா் மணிவண்ணன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதிக அளவில் பெய்த மழையின் காரணமாக பூமிக்கடியில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் இந்த திடீா் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறினா். தொடா்ந்து இது குறித்து ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT