நீலகிரி

கூடலூா் பகுதியில் வீடுகளில் திடீா் விரிசல்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடலூா் நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை திடீா் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள நடுகூடலூா், ராஜகோபாலபுரம் பகுதியில் சுமாா் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகளின் தரைத் தளங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் மற்றும் குழப்பமடைந்துள்ளனா்.

வீடுகள் இடிந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

இது குறித்து வருவாய்த் துறையிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

மேல்கூடலூரை அடுத்துள்ள கூடலூா்-உதகை மலைப் பாதையில் சனிபகவான் கோயில் அருகே சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த பிளவுக்கும் வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கும் தொடா்பு இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT