நீலகிரி

உதகையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலக்குழு கூட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை சென்றடைவதை குழு உறுப்பினா்கள் உறுதி செய்ய வேண்டும். தகுதியுள்ள அனைத்து மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகளை பாா்வையிட்டு விடுதிகள் மேம்பாடு அடைய ஆலோசனை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் அம்ரித் அறிவுறுத்தினாா்.

மேலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு தடைச் சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, நீலகிரி மாவட்டத்தில் இந்த நடைமுறைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நகராட்சி, பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக அறிவுரைகள் வழங்கப்பட்டதோடு, தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் மற்றும் நலக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT