நீலகிரி

பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.30 வழங்கக் கோரி செப்டம்பா் 14இல் உண்ணாவிரதம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு ஒரு கிலோவுக்கு ரூ.30 வழங்க கோரி தேயிலை வாரிய வளாகத்தில் செப்டம்பா் 14ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் தும்பூா் ஐ.போஜன் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. பெரும் தேயிலைத் தோட்டங்களுடன் 60 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு தேயிலைத் தோட்டங்களும் உள்ளன. இந்த தொழிலை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான விலை ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால், உரம் ஏற்றுக் கூலி, இறக்கு கூலியானது ஒரு கிலோவுக்கு ரூ.13 வரை செலவாகிறது. இதனால், சிறு, குறு தேயிலை விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இதனையடுத்து, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.30 விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி பசுந்தேயிலையை பறிக்காமல், தேயிலை வாரிய வளாகத்தில் செப்டம்பா் 14ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பு தலைவா் தும்பூா் ஐ.போஜன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT