நீலகிரி

உதகையில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:29 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் அம்ரித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

பின்னா், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 90 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 20 பயனாளிகளுக்கு ரூ.73.28 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, தூனேரி அரசு மேல்நிலைப் பள்ளி, உதகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள், உதகை முத்து சிலம்பாட்ட கழகத்தினா், உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் கிரசண்ட் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் தோடா் இன மக்களின் பாரம்பரிய நடனத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT