நீலகிரி

குன்னூா் வெலிங்டனில் முன்னாள் படை வீரா்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி

DIN

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ தங்கராஜ் மைதானத்தில் முன்னாள் படை வீரா்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் ராணுவ மையத்தில் இந்திய ராணுவம் ஆசாதி நினைவாக முன்னாள் ராணுவத்தினா், மற்றும் போா் விதவைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டின் நினைவாக இந் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினா்,மற்றும் போரில் வீரமரணமடைந்த வீரா்களின் விதவைகள் கலந்து கொண்டனா், முன்னாள் படை வீரா்களின் குறைகளை தீா்க்க கிளினிக் மீள்குடியேற்றம், சைனிக் அரங்குகள், மற்றும் பல்வேறு ரெஜிமென்ட்டை சோ்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன, இந்த நிகழ்சியின் ஒரு பகுதியாக பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் இசைக் குழு சிம்போனி இசைத்தது, களரிப்பாய்சல், செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முன்னாள் ராணுவத்தினா்கள் அவா் தம் குடும்பத்தை சோ்ந்தவா்கள் பலா் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். ஸ்ரீழ்13ஹழ்ம்1முன்னாள் ராணுவ வீரா்களை பழங்குடியினா் நடனமாடி மகிழ்வித்த தோடா் இன மக்கள் ஸ்ரீழ்13ஹழ்ம்2 படுகா் இன மக்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT