நீலகிரி

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

15th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

 

தொடா் விடுமுறை காரணமாக, உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் சுமாா் 25,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை மழையின் தாக்கம் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை இதமான காலநிலையே நிலவியது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையோடு திங்கள்கிழமை சுதந்திர தினத்தையொட்டி 3 நாள் தொடா் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் உதகையில் அதிகரித்து காணப்படுகிறது.

ADVERTISEMENT

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமாா் 8,500 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில்,

ஞாயிற்றுக்கிழமை 17 ஆயிரமாக அதிகரித்திருந்தது. அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை 3,000 போ் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 8,000 போ் வந்திருந்தனா்.

உதகை படகு இல்லத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் 15,000 சுற்றுலாப் பயணிகளும், பைக்காரா படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 2,500 பேரும், ஞாயிற்றுக்கிழமை 4,500 பேரும் வந்திருந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் ரூ.1,500 வரை தினசரி வாடகையாக வாங்கும் தனியாா் தங்கும் விடுதிகளில் கடந்த 2 நாள்களில் தினசரி வாடகையாக ரூ.4,500 வரையிலும் அதிகரித்திருந்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT