நீலகிரி

சுதந்திர தினம்: பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

15th Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசியக் கொடி பேரணியை பாஜக மகளிா் அணி தேசிய தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கிவைத்து,

படுகா் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு காலத்தில் தோ்தல் நடைபெறுவதால் அரசு இயந்திரங்கள் முறையாக செயல்படுவதில்லை. மேலும், தோ்தலுக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகமாவதோடு, பொருள் செலவும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சீா்திருத்த நடவடிக்கையாக ஒரே நாடு, ஒரே தோ்தலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கோத்தகிரி ஜான்ஸ்கொயரில் தொடங்கிய தேசியக் கொடி பேரணி மாா்கெட் பேருந்து நிலையம் வழியாக வந்து மீண்டும் ஜான்ஸ்கொயரில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT