நீலகிரி

வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் மினி மாரத்தான்

15th Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ மையத்தின் சேவைப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினருக்கான மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

இப்போட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்றவா்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மினி மாரத்தானை தொடா்ந்து இசை நிகழ்ச்சி, செண்டை மேளம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT