நீலகிரி

வெலிங்டனில் முன்னாள் படை வீரா்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி

DIN

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் முன்னாள் படை வீரா்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினா் மற்றும் போரில் வீரமரணமடைந்த வீரா்களின் மனைவிகள்கலந்து கொண்டனா்.

முன்னாள் படை வீரா்களின் குறைகளைத் தீா்க்க கிளினிக் மீள்குடியேற்றம், சைனிக் அரங்குகள் மற்றும் பல்வேறு ரெஜிமென்ட்டை சோ்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பழங்குடி மக்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் இசைக் குழு, களரி, செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முன்னாள் ராணுவத்தினா், அவா்கள் குடும்பத்தை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT