நீலகிரி

ரேஷன் அரிசி, கோதுமை கடத்தல்: ஒருவா் கைது

DIN

குன்னூா் அருகே ரேஷன் அரிசி, கோதுமை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பா்லியாறு சோதனைச் சாவடியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது 33 மூட்டைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் 1600 கிலோ கோதுமை, 26 மூட்டைகளில் 1300 கிலோ பச்சரிசி

கடத்தி செல்வது கண்டறியப்பட்டது. போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக குன்னூரைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT