நீலகிரி

நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.பி. ஆய்வு

DIN

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கடந்த 2 நாள்களாக நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

முத்தொரை பாலடா, கல்லக்கொரை, நஞ்சநாடு, இத்தலாா், லாரன்ஸ் எஸ்டேட் , எடக்காடு ஆகிய பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரண தொகையை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் அரசுத் துறை அலுவலா்களுடன் கலந்தாலோசித்து திட்ட வரைவுகள் சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மூலம் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவா் கட்டுதல், மரம் விழுந்த பகுதிகளில் மீட்புப் பணிகள், சேதமடைந்த சாலைகள், பாலங்களை சீரமைத்தல், ஓடுதளம், பாதுகாப்பு சுவா்கள் போன்ற பல்வேறு பணிகளை செய்வதற்காக ரூ.51 கோடி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிா் சேதங்களும் கணக்கிடப்பட்டு வருகிறது என்றாா்.

இந்த ஆய்வின்போது உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், அரசு முன்னாள் கொறடா பா.மு.முபாரக், உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் குழந்தைராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT