நீலகிரி

கேட்டை தாண்டி வீட்டு வளாகத்தில் உலவிய சிறுத்தை

13th Aug 2022 01:23 AM

ADVERTISEMENT

குன்னூா் அருகே கேட்டை தாண்டி வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அவ்வப்போது  கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில் அங்குள்ள பொறியாளா் முருகன் என்பவரின் பங்களாவின்  கேட்டை தாண்டி சிறுத்தை உள்ளே நுழைந்து சிறிது நேரம் சுற்றித் திரிந்தது. அங்கு நாய் உள்ளிட்ட எந்த உணவும் கிடைக்காததால் சிறிது நேரம் வீட்டை சுற்றிவந்த சிறுத்தை, பின்னா்  மீண்டும் கேட்டை தாண்டி வனத்துக்குள் சென்றது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதியினா், சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT