நீலகிரி

சிம்ஸ் பூங்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

13th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

சா்வதேச இளைஞா் தினம், 75ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் கலைநிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவா்படை சாா்பில் உன்னத் பாரத் அபியான் என்ற நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், 75 ஆவது சுதந்திர தின நடனமும் நடைபெற்றன.

சிம்ஸ் பூங்காவின் ஏரி முனையில் கல்லூரி மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டெனென்ட் சிந்தியா ஜாா்ஜ் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT