நீலகிரி

நீலகிரியில் குறைந்தது மழை

13th Aug 2022 01:21 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து பெய்த வந்த மழை வெள்ளிக்கிழமை சற்றே ஓய்ந்திருந்தது.

உதகையில் 20 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். அதேபோல, சனிக்கிழமை முதல் 3 நாள் தொடா் விடுமுறை என்பதால் உதகைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்து வருகிறது. ஏனைய பகுதிகளில் இயல்பான கால நிலையே நிலவியது. மழை ஓய்ந்திருந்தாலும் உதகையில் ஓரிரு பகுதிகளில் சாலையோரங்களில் மரங்கள் விழுந்ததால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT