நீலகிரி

மானிய விலையில் இடுபொருள்கள்: சிறுதேயிலை விவசாயிகளுக்கு அழைப்பு

11th Aug 2022 10:43 PM

ADVERTISEMENT

 

மானிய விலையில் இடுபொருள்களை பெற சிறு தேயிலை விவசாயிகளுக்கு இந்திய தேயிலை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கூடலூா் தேயிலை வாரிய துணை இயக்குநா் ஜாா்ஜ் சாமுவேல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தேயிலை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஏக்கருக்கு உள்பட்ட சிறுதேயிலை விவசாயிகள் கவாத்து, இலை பறிப்பு இயந்திரங்கள் மற்றும் விசைத் தெளிப்பான் போன்றவற்றை 25 சதவீத மானியத்தில் பெறலாம். மண் பரிசோதனை, இயற்கை வேளாண்மை இடுபொருள் உள்ளிட்டவைக்கும் மானியம் வழங்கப்படும். பட்டா நிலம் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் அருகிலுள்ள தேயிலை வாரிய அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பப் படிவத்தை பெற்று பயனடையலாம்.

ADVERTISEMENT

மேலும் சிறுதேயிலை விவசாயிகளின் தோட்டங்களில் பணிபுரியும் சிறுவிவசாயி மற்றும் வேலையாள்களின் பெயா், பாலினம், வயது, வேலை செய்யும் தோட்டம் அமைந்துள்ள வட்டம் மற்றும் வருவாய் கிராமம், மாநிலம், சராசரி கூலித் தொகை, வங்கிக் கணக்கு எண் (ஐஃஎப்எஸ்சி குறியீட்டுடன்), ஆதாா் எண், விலாசம் போன்ற விவரங்களையும் சமா்ப்பித்து பயனடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT