நீலகிரி

குன்னூரில் மூடுபனி: வாகன ஓட்டிகள் சிரமம்

11th Aug 2022 10:44 PM

ADVERTISEMENT

 

குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் மூடுபனியின் தாக்கம் வியாழக்கிழமை அதிகரித்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பனிமூட்டம் அதிக அளவு   காணப்படுகிறது. இதனால் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம்   உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளுக்கு செல்பவா்கள்   பகல் நேரங்களில் வாகனங்களை இயக்குவதில் சிரமப்பட்டனா்.

கடும் குளிரின் காரணமாக  பல்வேறு தனியாா்  தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினா். சாலைகளில் மூடுபனி அதிகம் காணப்பட்டதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படும் என்பதால்  முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டும் என்று காவல் துறையினா்  அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT