நீலகிரி

கூடலூா்-உதகை சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

10th Aug 2022 10:10 PM

ADVERTISEMENT

கூடலூா்-உதகை மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது.

அதன்படி, புதன்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக கூடலூா்- உதகை சாலையில் நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், உதகையிலிருந்து கேரளம் மற்றும் கா்நாடகம் மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா். மேலும், சாலையின் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ADVERTISEMENT

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை சீரமைத்தனா். இதையடுத்து, வாகனங்கள் சென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT