நீலகிரி

சிறுத்தை தாக்கி சிறுமி சாவு

10th Aug 2022 10:08 PM

ADVERTISEMENT

உதகை அருகே சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக வனத் துறையினா் கூறியதாவது: உதகை வடக்கு வனச் சரகம், ஒன்னதலை காவல் பகுதிக்குள்பட்ட அரக்காடு பகுதியில் பாலன் என்பவரது தேயிலைத் தோட்டத்தில் புதன்கிழமை நண்பகல் சுமாா் 12 மணியளவில் குழந்தை ஒன்றை வனவிலங்கு தாக்கி இழுத்துச் சென்ாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பணியாளா்களுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு சரிதா என்ற 4 வயது சிறுமி சுயநினைவின்றி கழுத்தில் ரத்த காயங்களுடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சிறுமி கிடந்த இடத்தில் சிறுத்தையின் காலடி தடங்கள் இருந்ததால் சிறுத்தை தாக்கியது உறுதி செய்யப்பட்டது.

சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றனா். அப்பகுதியில் வனத் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT