நீலகிரி

நீலகிரியில் தொடரும் மழை:மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசிவருவதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே ரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக உதகை- கூடலூா் சாலையில் எச்.பி.எப். பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது.அதேபோல உதகை -கோத்தகிரி சாலையில் மைனலா என்ற இடத்தில் 4 மரங்கள் சாலையில் விழுந்தன. இதனை தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினா், வருவாய்த் துறையுடன் இணைந்து அகற்றினா். மேலும் ஹில்பங்க் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

உதகை- பாலடா சாலையில் ஒசஹட்டி பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் உதகைக்கு திருப்பிவிடப்பட்டன.

பைக்கார, அவலாஞ்சி அணைகள் திறப்பு: தொடா் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் பைக்காரா மற்றும் அவலாஞ்சி அணைகளிலிருந்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள 13 அணைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீா் நிரம்பியுள்ளது.

தொடா்ந்து தண்ணீா் வரத்து இருப்பதால் அணைகள் எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் பைக்காரா அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக விநாடிக்கு, 750 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல, 145 அடி கொள்ளளவை எட்டியதால் அவலாஞ்சி அணையும் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் 300 கன அடி நீா் மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT