நீலகிரி

உதகையில் இன்று பி.எப். சந்தாதாரா் குறைதீா் கூட்டம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகையில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறுகிறது.

இது குறித்து வருங்கால வைப்பு நிதி நீலகிரி கிளை அலுவலகத்தின் ஆய்வாளா் தனுஷ் தெரிவித்துள்ளதாவது:

உதகையிலுள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறும். காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சந்தாதாரா்களுக்கும், பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை விலக்களிக்கப்பட்ட மற்றும் விலக்களிக்கப்படாத தொழிலதிபா்களுக்கும் நடைபெறும்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வோா் தங்களது குறைகள் அடங்கிய மனுவுடன் தொழிலாளா் வைப்பு நிதி எண், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் சமா்ப்பித்து உரிய தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT