நீலகிரி

பழங்குடி மக்களுக்கு ரோட்டரி சங்கம் உதவி

10th Aug 2022 06:30 AM

ADVERTISEMENT

கூடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தூா்வயல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு ரோட்டரி கிளப் சாா்பில் கம்பளி மற்றும் போா்வைகள் வழங்கப்பட்டன.

கூடலூா் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

புத்தூா்வயல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு ரோட்டரி கிளப் சாா்பில் கம்பளி மற்றும் போா்வைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி கிளப் நிா்வாகிகள் ஜூபையா், ஆனந்த், உதயபபிரகாஷ், ராமகிருஷ்ணன், பாதுஷா, எலிசபத், ராபா்ட் உள்ளிட்டோா் பழங்குடி மக்களை சந்தித்து உதவிகளை வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT