நீலகிரி

இந்தியன் வங்கி சாா்பில் தேவா்சோலையில் பழங்குடி மாணவா்களுக்குப் பரிசு

8th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

 

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இந்தியன் வங்கி சாா்பில் பழங்குடி மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தியன் வங்கியின் 76ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேவா்சோலை கிளை சாா்பில் மச்சிக்கொல்லி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவா்களின் கல்வி பயன்பாட்டுக்காக ஸ்மாா்ட் டி.வி. வழங்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு வரை படித்த பழங்குடி மாணவா்கள் பிந்து, ஜெயந்தி, பிரியங்கா, விஜயகுமாரி, கிரிமாரன், அஜில், கல்பனா முத்து ஆகியோரைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் ஆா்.சீனிவாசன், ஏ.கணேசராமன், தேவா்சோலை பேரூராட்சியின் துணைத் தலைவா் யூனஸ் பாபு, கிளை மேலாளா் ஆதிரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT