நீலகிரி

பசுந்தேயிலைக்கு விலை உயா்த்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

8th Aug 2022 01:42 AM

ADVERTISEMENT

 

 பச்சைத் தேயிலைக்கு  கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.30 விலை நிா்ணயம் செய்யக் கோரியும், படகா் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சோ்க்கக் கோரியும் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சாா்பில்  ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம்  நடைபெற்றது.

கோத்தகிரி அருகே மிளிதேன்  கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

இதில் பச்சைத் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.30 நிா்ணயம் செய்ய வேண்டும், படகா் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சோ்க்க வேண்டும், விவசாய நிலங்களை அழித்து  சொகுசு பங்களா காட்டேஜ் கட்டுவதை தடுக்க வேண்டும்,  கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.7 மட்டுமே விலை கிடைப்பதால் மத்திய, மாநில அரசுகள் தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும், தேயிலை வாரியத்தால்  வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை அனைத்து  விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும், அரசு  தேயிலை  ஏல மையத்தில் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோ ஒன்றுக்கு 150க்கு மேல் ஏலம் எடுக்க வா்த்தகா்களிடம் அறிவுறுத்த வேண்டும், காட்டெருமை, காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT