நீலகிரி

வாகன விபத்து: போக்குவரத்து பாதிப்பு

29th Apr 2022 04:23 AM

ADVERTISEMENT

 கூடலூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் அதிகமுள்ள பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் ஆட்டோ வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல் துறையினா் போக்குவரத்தை சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT