நீலகிரி

ஹெலிகாப்டா் விபத்து நடந்த கிராமத்தில் கண் பரிசோதனை முகாம்

27th Apr 2022 01:05 AM

ADVERTISEMENT

குன்னூா் அருகே ஹெலிகாப்டா் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ மையத்தின் சாா்பாக இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் 2021 டிசம்பா் 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 போ் உயிரிழந்தனா். விபத்தின்போது, உதவிக் கரம் நீட்டிய நஞ்சப்ப சத்திரம் கிராமத்தை ராணுவத்தினா் தத்தெடுத்து அப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனா்.

அதன்படி தென்னக ராணுவ மையம், நீலகிரி அரிமா சங்கம் சாா்பில் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணுவ மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையின் சிறப்பு கண் மருத்துவா்கள் மற்றும் வல்லுநா் குழுவினா் கிராம மக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இப் பரிசோதனை முகாமில் கண்ணில் குறைபாடு கண்டறியப்பட்டவா்கள் உயா் சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இம்முகாமில் அப்பகுதி மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT